பெயர் : மேத்யூ சைமன் J
பதிவேடு எண் : 15bcs0075
சுப்ரமணிய பாரதியார்
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882
பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
இறப்பு: செப்டம்பர் 11, 1921
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
பாரதியாரின் இலக்கிய பணி
‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
பாரதிதாசன்
“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஏப்ரல் 29, 1891
பிறப்பிடம்: புதுவை
இறப்பு: ஏப்ரல் 21, 1964
பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.
தமிழை என்னுயிர் என்பேன்
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (1876 - 1954) :
இந்நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவர் "கவிமணி" யாவர். நாகர்கோவிலுக்கருகில் உள்ள தேரூரில் தோன்றியவர். முறையாகத் தமிழ் பயின்று தமிழாசிரியராகப் பணியாற்றியவர். தேனொழுகக் கவிபாடுவதில் வல்லவர். இவர்தம் தித்திக்கும் தேன்சுவைக் கவிதைகள் "மலரும் மாலையும்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன. உமர்கய்யாமின் பாடல்களைத் தமிழில் சுவைபடப் பாடியுள்ளார். கவிதை நூல்களோடு பல ஆராய்ச்சி நூல்களையும் இவர் படைத்துள்ளார். "தாந்தளூர்ச் சாலை" என்ற நூல் பின்னவற்றுள் குறிப்பிடத்தக்கது.
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குறிப்பிடத்தக்கவர். தேசிக விநாயகம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில் 1876 சூலை 27-ம் நாள் வேளாளர் குலத்தில் சிவதாணுப்பிள்ளை- ஆதிலட்சுமியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் வாழ்ந்து வந்த நாஞ்சில்நாடு மலையாள நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால், பள்ளியில் மலையாள மொழி கற்க வேண்டியவரானார். எனினும் தேரூரை அடுத்த வாணன்திட்டிலிருந்த திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் கைவரப் பெற்றார். ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப்பின் கோட்டாறு அரசுப் பள்ளியில் பயின்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.
கோட்டாற்றில் மத்தியதரப் பாடசாலையின் உதவி ஆசிரியராகவும், பின்னர் நாகர்கோவில் போதனா முறைப் பாடசாலையிலும் திருவனந்தை பெண் போதனா முறைப் பாடசாலையிலும் உதவியாசிரிய ராகவும் அமர்ந்தார். விஞ்ஞான ஆசிரியராகவே பணி புரிந்தார். ஆனால் இலக்கியக் கல்வியில் தொடர்ந்து தன்னைக் கரைத்துக் கொண்டு வந்தார். மேலும் மேலும் நூல்களைக் கற்பதும் ஆராய்ச்சி செய்வதும் பாடல்களை இயற்றுவதும் இவரது அன்றாட வாழ்க்கையாயிற்று. தமிழ்க்கல்வியும் ஆங்கிலக் கல்வியும் கவிமணியின் பண்பாட்டுணர்ச்சியை மிகவும் ஆழமாக வளர்த்தன. ஓர் அறிவியல் கண்ணோட்டம் இயல்பாக இவரிடம் வெளிப்பட்டது. அத்துடன் நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் இயல்பாக வெளிப்பட்டது. அதுகாறுமான மரபுவழிச் சிந்தனை அணுகுமுறைகளுடன் புதிய நவீனப் பாங்குடைய சிந்தனைச் சேகரமும் கவிமணியின் பார்வையை ஆழப்படுத்தியது. அகலப்படுத்தியது.
பாரதியாருக்கு ஆறு ஆண்டுகள் முன்னே பிறந்தவர். பாரதியின் வாழ்வுக் காலம் கவிமணியின் வாழ்வுக் காலத்திற்குள் அடங்குகின்றது. 1882 ஆம் ஆண்டு முதல் 1921 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த பாரதியாரின் கவிதைகள் மக்களிடையே பெற்ற அத்துணைச் செல்வாக்கை கவிமணியின் பாடல்கள் பெற்றதாகத் தெரியவில்லை. இன்றும் இந்நிலைமையே தொடர்கிறது. இதற்குக் காரணம் இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் எழுந்த உரிமை வேட்கை பாரதியின் உள்ளத்தைத் தாக்கிக் கனல் கக்கும் தேசியப் பாடல்களை வெளிக் கொணர்ந்தது
மலரும் மாலையும்
பாட்டுக் கொருபுலவன் பாரதிஅடா! - அவன்
பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! - அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!
சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! - கவி
துள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா !
கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா ! - பசுங்
கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!
நாமக்கல் கவிஞர்
வெ. இராமலிங்கம் பிள்ளை
பிறப்பு வெ. இராமலிங்கம்
அக்டோபர் 19, 1888
மோகனூர், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு ஆகத்து 24, 1972 (அகவை 83)
தேசியம் இந்தியர்,
மற்ற பெயர்கள் காந்தியக் கவிஞர்
அறியப்படுவது கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
குறிப்பிடத்தக்க படைப்புகள் மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள் முதலியன.
அரசியல் இயக்கம் இந்திய விடுதலை இயக்கம்
சமயம் இந்து சமயம்
பெற்றோர் வெங்கடராமன், அம்மணியம்மாள்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும்யாரும் சேருவீர் (கத்)
ஒண்டி அண்டிக்f குண்டுவிட்டு
உயிர்பறித்த லின்றியே
மண்டலத்தில் கண்டிலாத சண்டை
யொன்று புதுமையே
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பிறப்பு அ.கல்யாணசுந்தரம்
ஏப்ரல் 13, 1930
செங்கப்படுத்தான்காடு
இறப்பு அக்டோபர் 8, 1959 (அகவை 29)
தொழில் பல தொழில்கள் கட்டுரையைப் பார்க்க
நாட்டுரிமை இந்தியா
எழுதிய காலம் 1955-1959
துணைவர்(கள்) கௌரவம்மாள்
பிள்ளைகள் க.குமரவேலு
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
பிறப்பு வளர்ப்பு குடும்பம் தொகு
தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.
எழுத்தாற்றல் தொகு
பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
தத்துவம்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
காண்பதெல்லாம் இன்பமப்பா!
விதியென்னும் குழந்தை கையில்
உலகந்தன்னை
விளையாடக் கொடுத்துவிட்டாள்
இயற்கையன்னை - அது
விட்டெறியும் உருட்டிவிடும்
மனிதர் வாழ்வை
மேல் கீழாய்ப் புரட்டிவிடும்
வியந்திடாதே
கவியரசு கண்ணதாசன்
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்...
கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.
`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.
எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.
`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.
வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!
`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.
’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’
கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.
கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.
காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!
ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தி; `பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!
படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!
கண்ணதாசன் இறந்துவிட்டார்’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.
உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’
தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர், `வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.
காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே! ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.
திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல்திரை, முல்லை, கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.
திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.
`குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.
`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.
தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!
`அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்
இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்...
`ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு!
வைரமுத்து
ஒவ்வொரு தமிழ் ரசிகனுக்கும் பாடல்கள் என்றாலோ, கவிதைகள் என்றாலோ, ஹைக்கூ என்றாலோ நினைவுக்கு வருபவர் ‘கவியரசு வைரமுத்து’ அவர்களே. தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழும் அவர், சிறந்த பாடலாசிரியருக்காக ‘ஆறு முறை தேசிய விருதும்’, ‘கலைமாமணி விருதும்’, ‘பத்மஸ்ரீ விருதும்’ பெற்ற இந்திய தமிழ்க் கவிஞர். ‘கவியரசு’ என்றும், ‘கவிப்பேரரசு’ என்றும், ‘காப்பியப்பேரறிஞர்’ என்றும், ‘காப்பியசாம்ராட்’ என்றும் பட்டங்கள் பெற்ற வைரமுத்து அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஜூலை 13, 1953
பிறந்த இடம்: வடுகபட்டி, தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தொழில்: கவிஞர், பாடலாசிரியர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
வைரமுத்து அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்திலிருக்கும் வடுகப்பட்டியில் (பெரியகுளம் அருகில் உள்ளது) ஜூலை 13 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் ராமசாமி தேவருக்கும், அங்கம்மாளுக்கும் மகனாக ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்
தன்னுடைய இளமைப் பருவத்தில் அண்ணாவின் இனிமையான தமிழ் நடையாலும், பெரியாரின் சிந்தனைகளாலும், கருணாநிதியின் இலக்கியத் தமிழாலும் கவரப்பட்டு, பாரதியார், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசன் அவர்களின் கவிதை நடையால் பெரிதும் ஈர்க்கப்பட்டதால், மேலும் தனது கிராமத்தின் சுற்றுப்புறச்சூழலும் அவரைத் தனது பன்னிரெண்டாவது வயதிலேயே கவிதை எழுத ஊக்குவித்தது. திருவள்ளுவரின் திருக்குறளால் கவரப்பட்ட அவர், தனது பதினான்காவது வயதிலேயே, தமிழ் செய்யுளின் யாப்பின் சொல் இலக்கண விதிகளைக் கொண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினார். பள்ளிப்படிப்பிலும் சிறந்து விளங்கிய அவர், தனது உயர்கல்விப் படிப்பில் மதுரை மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று, அதற்காக வெள்ளிப்பதக்கமும் வென்றார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், தமிழில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ) பெறுவதற்காக, அவர் சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி நாட்களில், அவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு, சிறந்த பேச்சாளர் மற்றும் கவிஞருக்காக 20க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றார். கல்லூரியின் இரண்டாவது ஆண்டில், அவருக்கு பத்தொன்பது வயதிருக்கும் போது, ‘வைகறை மேகங்கள்’ என்ற முதல் பாடல் திரட்டை வெளியிட்டார். அவரது இந்தப் படைப்பானது, சென்னையிலுள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியின் பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரது படைப்பு பாடத்திட்டத்தில் வந்ததால், ஒரு மாணவக் கவிஞராக அவர் முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்றார். பின்னர், முதுகலைத் (எம்.ஏ) தேர்வில் தங்கப்பதக்கம் பெற்றார். 1979ல், அவரது இரண்டாவது படைப்பான ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ என்ற படைப்பை வெளியிட்டார்.
திரையுலக வாழ்க்கை
1978 ஆம் ஆண்டு பாரதிராஜா அவர்களின் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ என்ற பாடலே அவர் திரையுலகில் இயற்றிய முதல் பாடலாகும். பின்னர், அவர் ‘நினைவெல்லாம் நித்யா’ (1982), ‘முதல் மரியாதை’ (1985), ‘புன்னகை மன்னன்’ (1986), ‘வேதம் புதிது’ (1987), ‘கொடி பறக்குது’ (1989), ‘புதிய முகம்’ (1993), ‘ஜென்டில்மேன்’ (1993), ‘கிழக்குச் சீமையிலே’ (1993), ‘கருத்தம்மா’ (1994), ‘காதலன்’ (1994), ‘பவித்ரா’ (1994), ‘டூயட்’ (1994), ‘முத்து’ (1995), ‘இந்திரா’ (1995), ‘பாட்ஷா’ (1995), ‘இந்தியன்’ (1996), ‘இருவர்’ (1997), ‘நிலாவே வா’ (1998), ‘காதல் மன்னன்’ (1998), ‘ஜீன்ஸ்’ (1998), ‘துள்ளாத மனமும் துள்ளும்’ (1999), ‘வாலி’ (1999), ‘ஆடுகளம்’ (1999), ‘முதல்வன்’ (1999), ‘படையப்பா’ (1999), ‘சங்கமம்’ (1999), ‘ஜோடி’ (1999), ‘குஷி’ (2000), ‘ரிதம்’ (2000), ‘ஆளவந்தான்’ (2000), ‘முகவரி’ (2000), ‘அலைபாயுதே’ (2000), ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ (2000), ‘பார்த்தேன் ரசித்தேன்’ (2000), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘மஜ்னு’ (2001), ‘ஷாஜகான்’ (2001), ‘சிடிசன்’ (2001), ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2002), ‘வில்லன்’ (2002), ‘ஜெமினி’ (2002), ‘அன்பே சிவம்’ (2003), ‘இயற்கை’ (2003), ‘செல்லமே’ (2004), ‘அட்டஹாசம்’ (2004), ‘ஆயுத எழுத்து’ (2004), ‘வசூல் ராஜா MBBS’ (2004), ‘உள்ளம் கேட்குமே’ (2005), ‘வரலாறு (2006), ‘அந்நியன்’ (2006), ‘சிவாஜி: தி பாஸ்’ (2007), ‘மொழி’ (2007), ‘குரு’ (2007), ‘தசாவதாரம்’ (2008), ‘அசல்’ (2009), ‘மோதி விளையாடு’ (2009), ‘சிவப்பு மழை’ (2009), ‘ஆனந்த தாண்டவம்’ (2009), ‘அயன் (2009)’, ‘எந்திரன் (2010)’, ‘ராவணன்’ (2010), ‘வாகை சூட வா’ (2011), ‘யமுனா’ (2012), ‘நீர்ப்பறவை’ (2012), மற்றும் ‘கடல்’ (2013).
அவர் எழுதிய பல பாடல்கள் அவருக்குப் புகழ் பெற்றுத்தந்தாலும், ‘பூங்காற்று திரும்புமா’ – ‘முதல் மரியாதை’ (1985), ‘சின்ன சின்ன ஆசை’ – ‘ரோஜா’ (1993), ‘போறாளே பொன்னுத்தாயி’ – ‘கருத்தம்மா’ (1995), ‘முதல் முறையே கில்லி பார்த்தேன்’ – ‘சங்கமம்’ (2000), ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ – ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2003) மற்றும் ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ – ‘தென்மேற்குப் பருவக்காற்று’ (2011) போன்ற பாடல்கள் அவருக்கு தேசிய விருதுகளைப் பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல், அவருக்குப் பெரும் புகழையும் தேடித்தந்தது.
வைரமுத்துவின் படைப்புகள்
தமிழ்மொழியின் மீது அளவற்றப் பற்றுக் கொண்ட அவர், திரைப்படங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், பல்வேறு நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், நூல்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். அவரது படைப்புகளில் சில
நாவல்கள் – ‘வில்லோடு வா நிலவே’, ‘தண்ணீர் தேசம்’, ‘வானம் தொட்டுவிடும்’, ‘தூரம்தான்’, ‘கருவாச்சி காவியம்’, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, மற்றும் ‘மூன்றாம் உலகப் போர்’
கவிப் பேரரசு அவர்களின் உலகப் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்புகள் – ‘வைகறை மேகங்கள்’, ‘சிகரங்களை நோக்கி’, ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’, ‘தமிழுக்கு நிறமுண்டு’, ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’, ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’, ‘சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’, ‘இதனால் சகலமானவர்களுக்கும், ‘இதுவரை நான்’, ‘கொஞ்சம் தேனீர் நிறைய வானம்’, ‘பெய்யென பெய்யும் மழை’, ‘நேற்று போட்ட கோலம்’, ‘’ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்’, மற்றும் ‘ஒரு மெளனத்தின் சப்தங்கள்’.
நூல்கள் – ‘கள்ளிகாட்டு இதிகாசம்’, ‘இதனால் சகலமானவர்களுக்கும்’, ‘இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல’, ‘இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்’, ‘ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்’, ‘காவி நிறத்தில் ஒரு காதல்’, ‘என் பழைய பனை ஓலைகள்’, ‘இன்னொரு தேசிய கீதம்’, ‘வைகறை மேகங்கள்’, ‘ரத்ததானம்’, ‘சிற்பியே உன்னை செதுக்குகிறேன்’, ‘எல்லா நதியுளும் என் ஓடம்’, ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’, ‘கவிராஜன் கதை’, ‘வானம் தொட்டுவிடும் தூரம்தான்’, ‘தண்ணீர் தேசம்’, ‘நேற்று போட்ட கோலம்’, ‘தமிழுக்கு நிறம் உண்டு’, ‘மீண்டும் என் தொட்டிலுக்கு’, ‘கொடிமரத்தின் வேர்கள்’, ‘வில்லோடு வா நிலவே’, ‘என் ஜன்னலின் வழியே’, ‘ஒரு மௌனத்தின் சப்தங்கள்’, ‘கல்வெட்டுகள்’, ‘கேள்விகளால் ஒரு வேள்வி’, ‘கொஞ்சம் தேநீர் நிறைய வானம்’, ‘வடுகபட்டி முதல் வல்கா வரை’, ‘பெய்யென பெய்யும் மழை’, ‘இதுவரை நான்’, ‘ஒரு கிராமத்து பறவையும் சில கடல்களும்’, ‘பாற்கடல்’ மற்றும் ‘கருவாச்சி காவியம்’.
விருதுகளும், அங்கீகாரங்களும்
1981ல் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காகவும், 1995ல் ‘கருத்தம்மா’ படத்திற்காகவும், 1996ல் ‘முத்து’ மற்றும் ‘பம்பாய்’ படங்களுக்காகவும், 2000ல் ‘சங்கமம்’ படத்திற்காகவும், 2006ல் ‘அந்நியன்’ படத்திற்காகவும், 2008ல் ‘பெரியார்’ படத்திற்காகவும் தமிழ்நாட்டின் மாநில விருதைப் பெற்றார்.
1986ல் ‘கலைமாமணி விருது’ வழங்கப்பட்டது.
2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.
1986 ல் ‘முதல் மரியாதை’ (1985) படத்திலிருந்து வரும் ‘பூங்காற்று திரும்புமா’ என்ற பாடலுக்காகவும், 1993ல் ‘ரோஜா’ (1993) படத்திலிருந்து வரும் ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடலுக்காகவும், 1995ல், ‘கருத்தம்மா’ (1995) படத்திலிருந்து வரும் ‘போறாளே பொன்னுத்தாயி’ என்ற பாடலுக்காகவும், ‘பவித்ரா’ படத்திலிருந்து வரும் ‘உயிரும் நீயே’ என்ற பாடலுக்காகவும், 2000ல், ‘சங்கமம்’ (2000) படத்திலிருந்து வரும் ‘முதல் முறையே கில்லி பார்த்தேன்’ என்ற பாடலுக்காகவும், 2003ல், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2003) படத்திலிருந்து வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடலுக்காகவும், 2011ல், ‘தென்மேற்குப் பருவக்காற்று’ (2011) படத்திலிருந்து வரும் ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்ற பாடலுக்காகவும் ஆறு முறை தேசிய விருதுகளை வென்றார்
சிரிப்பு
வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது
வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு
எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு
உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்
சிரிக்காத உதட்டுக்குப்
பிற்சொன்ன ஐந்தும்
இருந்தென்ன? தொலைந்தென்ன?
தருவோன் பெறுவோன்
இருவர்க்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தானே சிரிப்பு
சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே
துன்பம் வெளியேறிவிடுகிறது
ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது
சிரித்துச் சிந்தும் கண்ணீரில்
உப்புச் சுவை தெரிவதில்லை
கவிஞர்களின் கவிஞர் ‘மீரா'
வசனகவிதை தந்த பாரதிக்குப் பின்னர் புதுக் கவிதையின் தந்தையாய்த் திகழ்ந்த ந. பிச்சமூர்த்திக்குப் பிறகு கவிதையின் காலம் முடிந்தேவிட்டது என்று ஆரூடம் கணித்தவர்களின் வாக்குப் பொய்க்க, நவகவிகளுக்கு நிலைபேறு மிக்க வாழ்வு கொடுத்த கவிஞர்களின் கவிஞர் மீரா திராவிடச் சிந்தனையில் அரும்பிப் பொதுவுடமைத் தத்துவத்தில் பூத்துக் குலுங்கிய கவிதை நந்தவனம். 10.10.1938-ல் தோன்றி 01.09.2002-ல் மறைந்த சிவகங்கைச் சீமையின் கவிதைக் குயில்.
"பிறந்தது தான் பிறந்தேன் நான் பெண்ணாய்ப் பிறந்தேனா" என்று கவிதை பாடிய கவிஞர் மீ. ராசேந்திரனின் முதல் இரு எழுத்துக்களின் இணைப்பிலிருந்து தான் கவிஞர் மீரா என்னும் பெயர் பிறப்பு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள்
"இலக்குமி அம்மாவும், எஸ். மீனாட்சிசுந்தரமும் என் மாதா பிதாக்கள். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என் குரு. மகாகவி பாரதி என் தெய்வம். என் குருவின் மூலமே என் தெய்வத்தை தரிசித்தேன். பாரதிதாசனின் தாசன் ஆன நான், மற்றும் ஒரு பாரதிதாசனானேன்" என்று குறிப்பிடும் மீரா, எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் எந்தத் தடையுமின்றி குறிக்கோளுடன் வாழ்ந்து சிறந்தவர். அண்ணா, பாரதிதாசன், கண்ணதாசன், மு.வ. ஆகியோர் எழுத்துக்களில் ஏற்பட்ட ஈர்ப்பால் எழுத வந்த மீரா தொடக்கத்தில் மரபுக் கவிதைகள் எழுதியவர்.
சாகாத வானம் நாம்; வாழ்வைப் பாடும்
சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப்
போகாத நெடுங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும்
பொதியம் நாம்; இமயம் நாம்; காலத்தீயில்
வேகாத பொசுங்காத தத்துவம் நாம்;
வெங்கதிர்நாம்; திங்கள் நாம்; அறிவை மாய்க்கும்
ஆகாத பழமையினை அகற்றிப் பாயும்
அழியாத காவிரிநாம்; கங்கையும் நாம்;
என்ற மீராவின் இப்பாடல், அக்காலத்தில் திராவிட இயக்க மேடைகளில் பாரதிதாசன் பாடல்களுக்கு அடுத்ததாக ஒலித்த பாடல் இது என்பார் அப்துல் ரகுமான்.
தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கில்லை
தெருவோரச் சாக்கடைக்கு வருமா தெப்பம்?
என்ற மீராவின் கவிதை அண்ணாவை ஈர்த்த கவிதை. அவர் அரங்குகளில் எடுத்து முழங்கிய கவிதை. மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பயின்ற கவிஞர் மீரா, சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியேற்றார். அக்காலத்தில் மதுரைப் பல்கலைக் கழகக் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் தொடங்கப்பட்ட மூட்டா (MUTA) இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். அவ்வமைப்பின் ஜர்னல் ஆசிரியரானார். போராட்டத் தீவிரத்தால், கல்லூரியினரால் இருமுறை பணி நீக்கம் செய்யப் பட்டார். அதுசமயம் உருவானதே அன்னம் பதிப்பகம். அகரம் அச்சகத்தின் வழி, நவீன படைப்பிலக்கியங்களை உருவாக்கித் தமிழுலகுக்குத் தந்தார். அபியின் ‘மெளனத்தின் நாவுகள்' என்ற தொகுப்பை அடுத்து, நீலமணி, கல்யாண்ஜி, இரா. மீனாட்சி உள்ளிட்டோர் கவிதைகளை, நவகவி என வரிசைகளாக்கி வழங்கினார். கி.ரா.வின் படைப்புகளை வெளியிட்டுப் பெருங்கவனிப்பை ஏற்படுத்தியது அன்னம். பின்னர்,'அன்னம் விடு தூது', ‘கவி' என்ற கவிதைக்கான சிற்றேடு ஆகியவற்றையும் அன்னம் வாயிலாக வெளியிட்டார் மீரா.
மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம், படைப்பிலக்கியம் என தமிழின் துறைதோறும் பதிப்பாக்கங்களை வலுப்படுத்தித் தேர்ந்த பதிப்பகராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். தரமான இலக்கியக் கூட்டங்களை ஏற்பாடு செய்து இனிது நடத்தினார். அவற்றுள் மிகவும் குறிப்பிடத் தக்கது சிவகங்கையில் அவர் மூன்று நாள்கள் நடத்திய ‘பாரதி நூற்றாண்டு விழா'.
பதிப்பகத் துறையில் எழுத்துப் பரம்பரையை உருவாக்கி வளர்த்த அவர், தம் கல்லூரிப் பணியிலும் சிறப்பான மாணவர்களை உருவாக்கினார். எந்தக் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடினாரோ, அந்தக் கல்லூரியிலேயே பின்னர் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பையும், பொறுப்பு முதல்வர் பணியையும் அவர் ஆற்ற நேர்ந்தது. அதுசமயம் கல்லூரி நிர்வாகத்தச் சீர்செய்து மாணவர்களிடையே ஒழுக்கக் கட்டுப்பாடுகளை வலியுறுத்திய அவர், அவ்வூரின் பெரிய மனிதர் ஒருவரது பிள்ளையின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, கும்பகோணம் அரசுக் கல்லூரிக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார்.
"கல்லூரிப் பணி, தமிழ்த்துறைத் தலைமைப்பணி, முதல்வர் பொறுப்புப் பணி, கல்லூரிப் போராட்டப் பணி, கல்லூரி ஆசிரியர்கள் தொழிற்சங்கப் பணி, கவி இதழ்ப்பணி, அன்னம் விடு தூது இதழ்ப் பணி, அன்னம் பதிப்பகச் சிறப்பாசிரியர் பணி, அகரம் அச்சு மேற்பார்வைப் பணி, கொஞ்சம் குடும்பப் பணி இவை எல்லாம் சேர்ந்து என் எழுத்துப் பணியை வளைத்துப் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டன" என்று தாம் பணிகளால் பிணிக்கப்பட்டு கவிப் பறவையானதைக் குறிப்பிடும் மீரா, அவற்றையும் மீறித் தமிழுக்குச் சிறப்பான ஆக்கங்களை அளித்துள்ளார்.
‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்' அக்காலத்தில் கல்லூரிக் காதலர்களின் வேதப் புத்தகமாகத் திகழ்ந்தது. இவர்தம் இலக்கிய, லட்சியக் கவிதைகளின் ஆவணமாகத் திகழ்ந்த ‘மூன்றும் ஆறும்' கவியரங்கக் கவிதைத் தொகுப்பு, ஊழல் அரசியலையும் நாணயமற்ற வாழ்வின் போக்குகளையும் அங்கதமாகக் குத்திக் காட்டும் கவிதைக்கூர் முனைகள்
‘ஊசிகள்'.
ஹைகூவும் சென்ரியூவும் தமிழுலகில் இறக்குமதியான காலத்தில் தமிழ் மரபில் இவரிடமிருந்து ஒலித்தது குக்கூ.
அழுக்கைத் தின்னும்
மீனைத் தின்னும்
கொக்கைத் தின்னும்
மனிதனைத் தின்னும்
பசி!
என்பது அவர்தம் குக்கூக் கவிதைகளுள் ஒன்று. இராசேந்திரன் கவிதைகள், மீராவின் கவிதைதள், கோடையும் வசந்தமும் ஆகியன இவர்தம் பிற கவிதைத் தொகுப்புகள். ‘எதிர்காலத் தமிழ்க்கவிதை' கவிதை விமர்சன நூல். ‘வா இந்தப்பக்கம்' நிகழ்காலச் சமுதாய நிகழ்வுகளை அங்கதமாக விமர்சிக்கும் கட்டுரைத் தொகுப்பு.
எளிமையும் அன்பும் தோழமையும் நிறைந்த புன்சிரிப்புக் கவிஞர் மீரா, எழுத்திலும் பேச்சிலும் பொங்கிப் பெருகும் அங்கதம் இவர்தம் உயிர்த் துடிப்பு. நிறைவுக் காலத்தில் ‘ஓம்சக்தி' இதழின் ஆசிரியராகவும், சிறிது காலம் கோவையில் தங்கிப் பணியாற்றிய மீரா, எஸ்.ஆர்.கே. யைப் போல் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டார்.
"பாரியின் பறம்பை மூவேந்தர்கள் முற்றுகையிட்டது போல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு, இதய நோய், வாத நோய் ஆகிய முந்நோய்களால் தாக்கப் பட்டுப் படுக்கையில் கிடக்கிறேன். இப்போதாவது கடவுளைக் கும்பிடுங்கள், கோயிலுக்குப் போங்கள்... என்று நெய்வேலியிலிருந்து வரும்போதெல்லாம் என் அருமை மகள் செல்மா சொல்லிப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. என்னால் முடியவில்லை. கடவுள் இருந்து காப்பாற்றினால் நல்லதுதான்.(நான் பிழைத்துப் போகிறேன்) ஆனால், இயல்பாய் எனக்கு அந்த நம்பிக்கை வரவில்லை. இனி சாகப் போகும்போதா வரப்போகிறது? திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி கொடுத்த பெரியார் விருது என் படுக்கை அருகே இருக்கிறது" என்று அக்காலகட்டத்திலும் அங்கதத்தோடு தன் நிலையை எழுதினார் மீரா.
அப்துல் ரகுமான் வழங்கிய கவிக்கோ விருதும், கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்குப் பெருமை சேர்த்தன. இவர்தம் பதிப்பாக்கங்களால் மிகச்சிறந்த விருதுகள் பெற்ற படைப்பாளிகளை உருவாக்கிய படைப்பாளி கவிஞர் மீரா.
‘தனியாய்... தன்னந்தனியாய்... தன்னந் தனியனாய்...' இது மீரா எழுத நினைத்திருந்த நாவலின் தலைப்பு. நிறைவேறாது விடப்பட்ட இந்நாவலைப் போலவே இவர்தம் கனவாகிய, மாமல்லபுரச் சாலையில் கவிஞர்களுக்காக, பாரதி கவிதா மண்டலம் அமைக்க வேண்டும் என்ற ஆவலும்... கவிக்கனவு பலிக்கக் காலம் துணை செய்யட்டும்!
ந. பிச்சமூர்த்தி :
ந. பிச்சமூர்த்தி (நவம்பர் 8, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.
படைப்புகள் :
சிறுகதை
· பதினெட்டாம்பெருக்கு
· மோகினி
· மாங்காய் தலை
· காபூலிக் குழந்தைகள்
· விஜயதசமி
கவிதைத் தொகுப்புகள்
· காட்டுவாத்து
· வழித்துணை
· கோடை வயல்
அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான்,(பிறப்பு: நவம்பர் 9, 1937), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார்.கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார்.ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
மு. மேத்தா:
மு. மேத்தா (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும்.
கவிதை நூல்கள்
1. கண்ணீர்ப் பூக்கள்
2. மனச் சிறகு (1978)
3. ஊர்வலம்
4. திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
5. நந்தவன நாட்கள்
6. வெளிச்சம் வெளியே இல்லை
7. ஆகாயத்துக்கு அடுத்த வீடு
8. மு.மேத்தா கவிதைகள்
9. ஒற்றைத் தீக்குச்சி
10. என் பிள்ளைத் தமிழ்
11. புதுக்கவிதைப் போராட்டம் (2004)
12. பித்தன்
சிற்பி பாலசுப்பிரமணியம் :
சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர்.
கவிதை நூல்கள்
1. நிலவுப் பூ (1963) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி முதற்பதிப்பு-1963
2. சிரித்த முத்துக்கள் (1966) மணிவாசகா் பதிப்பகம் சென்னை, முதற்பதிப்பு-1968
3. ஒளிப்பறவை (1971) அன்னம் வெளியீடு சிவகங்கை முதற்பதிப்பு-1971
4. சர்ப்ப யாகம் (1976) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி முதற்பதிப்பு-1976
5. புன்னகை பூக்கும் பூனைகள் (1982) அன்னம் வெளியீடு சிவகங்கை முதற்பதிப்பு-1982
6. மௌன மயக்கங்கள் (தமிழக அரசு பரிசு பெற்றது) (1982)
7. சூரிய நிழல் (1990) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி முதற்பதிப்பு-1990 இரண்டாம் பதிப்பு 1995
8. இறகு (1996) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி
9. சிற்பியின் கவிதை வானம் (1996)(திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) மணிவாசகா் பதிப்பகம் சென்னை, முதற்பதிப்பு-1996
10. ஒரு கிராமத்து நதி (1998)(சாகித்ய அகாதெமி விருது பெற்றது)
11. பூஜ்யங்களின் சங்கிலி (தமிழக அரசு பரிசு பெற்றது) (1999) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி
12. பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு(2001)
13. பாரதி - கைதி எண் : 253 (2002)
14. மூடுபனி (2003)
15. சிற்பி : கவிதைப் பயணங்கள் (2005)
16. தேவயானி (2006)
17. மகாத்மா (2006)
18. சிற்பி கவிதைகள் தொகுதி - 2 (2011)
19. நீலக்குருவி (2012)
20. கவிதை வானம் (சிற்பியின் கவிதைத் தொகுப்பு)
Keep doing this.. And it helps me a lot. Thank you so much
ReplyDeleteT-Shirt - surgical steel vs titanium
ReplyDeleteMore imagesTitanium Iron-Edge (T-Shirt) · More imagesTitanium Iron-Edge titanium dental implants and periodontics (T-Shirt) titanium nipple bars · More imagesTitanium Iron-Edge used ford edge titanium (T-Shirt) · More titanium bars images smith titanium